தமன்னா நடிக்க வந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. திருமணத்திற்கு ரெடியாகிவிட்டீர்களா? என்று கேட்டால் அதற்குள் என்ன அவசரம் என்று கேட்கிறார்.
அதோடு நீச்சல் உடை, முத்த காட்சிகளில் நடிகைகள் நடிப்பது குறித்தும் தமன்னா அளித்த பேட்டி வருமாறு:– சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே நீச்சல் ட்ரெஸ் போடக் கூடாது. லிப் லாக் சீனிலும் நடிக்க கூடாது என்று முடிவு செய்து இருந்தேன். இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன்.
சக நடிகைகள் இதுபோன்ற சீன்களில் நடிக்கிறார்களே என்று கேட்கலாம். அவர்களை பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். அப்படி நடிப்பது அவர்களது விருப்பம். என்னை பொறுத்தவரை அது போன்ற காட்சிகளில் நடிப்பது தவறாகபடுகிறது.
உங்களுக்கு எப்போ கல்யாணம்?’ என்று கேட்டால், நான் என் ட்வென்ட்டீஸ்லதான் இருக்கேன். அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்? இந்தக் கேள்விக்கு மூணு வருஷங்களுக்கு லீவு விடுங்கப்பா என்கிறார் தமன்னா.
0 comments:
Post a Comment