↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், உதயநிதி நடித்த நண்பேண்டா ஆகிய திரைப்படங்கள் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமாகும் 'சகாப்தம்' திரைப்படமும் அதே தேதியில் ரிலீஸாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரமாண்டமாக ரிலீஸான இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட்டில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர் என்பதை ஏற்கனவே அறிந்ததே.

சண்முகப்பாண்டியன், நேஹா ஹிங்கே, சுப்ரா அய்யப்பா, தேவயானி, ரஞ்சித், தலைவாசல் விஜய், சிங்கம்புலி உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். எல்.கே.சுஷீஷின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படத்தை சுரேந்திரன் இயக்கியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top