↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இளையதளபதி விஜய் 'புலி' படத்தை அடுத்து நடிக்கவுள்ள அடுத்த படத்தை ராஜா ராணி' இயக்குனர் அட்லி இயக்கவுள்ளார் என்பது குறித்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அட்லி தனது உதவியாளர் இயக்கவிருக்கும் ஒரு புதிய படத்திற்கு திரைக்கதை அமைத்து கொடுத்திருப்பதாகவும், இந்த படத்தை அட்லியின் சொந்த நிறுவனமான 'தி நெக்ஸ்ட் பிக் பிலிம்' என்ற நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே 'குக்கூ' என்ற படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் வெளியான 'காக்கி சட்டை' நாயகி ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அட்லி வெளியிடுவார் என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top