தோரோட்டம் துவங்கிவிட்டது. யெஸ்… பல மாதங்களாகவே இழுபறியாக இருந்த சேரனின் C2H திட்டம் வெகு விமரிசையாக துவங்கப்பட்டிருக்கிறது. நேரு உள் விளையாட்டரங்கத்தில் ஆயிரக்கணக்கான முகவர்கள், அவர்களின் குடும்பங்கள் புடைசூழ இந்த திட்டத்தை துவங்கிவிட்டார் சேரன். முக்கியமாக திரையுலகத்தின் மூத்த கலைஞர்கள் வாழ்த்துக்களுடன்…
அவரது முதல் படமான ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படம் இந்நேரம் தமிழர்களின் வீடுகளில் தேய தேய பார்க்கப்பட்டிருக்கும். அதற்கப்புறமும் வரிசையாக நல்ல படங்களை கையில் வைத்திருக்கிறார் சேரன். ஒரே நாளில் திரையரங்குகளிலும் இந்த படங்கள் வெளியிடப்பட வேண்டும் என்கிற அவரது ஆசை, முயற்சியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது நிறைவேறுமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை C2H ன் துவக்க விழா.
தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு. தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் எப்போதும் துடிப்பாகவே செயல்படும் சிவசக்தி பாண்டியன் ஆகியோரது பேச்சு மிக மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. கடைசி நேரத்தில் கூட இந்த விழாவுக்கு இவர்கள் வரக்கூடாதென மிரட்டல்கள் வந்ததாம். அந்த மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சுகிற ஆட்கள் நாங்கள் இல்லை என்றார்கள். ஒரு திரைப்படம் மட்டுமல்ல, திரைப்படம் தொடர்பான விழாவிலும் ஆக்ஷன் சென்ட்டிமென்ட் இருந்தது என்றால் அது இந்த விழாவாகதான் இருக்கும்.
தனது குருநாதர் கே.எஸ்.ரவிகுமார் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக் கொண்டார் சேரன். தனது உரையில் இதை குறிப்பிட்ட கே.எஸ்.ரவிகுமார், நியாமா பார்த்தா நான்தான் அவன் கால்ல விழணும். அவ்வளவு பெரிய புரட்சியை பண்ணியிருக்கான் அவன் என்று வாழ்த்தினார். இதைவிட பெரும் பேறு வேறு என்ன இருந்துவிட முடியும் சேரனுக்கு?
0 comments:
Post a Comment