முன்னணி நடிகையாக வலம் வந்த அசினின் மார்க்கெட் தற்போது டல்லடித்து வருகிறது. இந்தியில் அபிஷேக் பச்சனின் ‘ஆல் இஸ் வெல்’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
வேறு படவாய்ப்புகள் ஏதும் இல்லாததலல் எப்போதாவது வரும் விளம்பர படங்களை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலி இருப்பதால் சமூக வலைதளங்களிலும் நண்பர்களுடன் ஊர் சுற்றியும் பொழுதை கழிக்கிறார். அடுத்தடுத்து வரும் செல்போன் ஆப்ஸ்களை பயன்படுத்த தவறுவதில்லை. புதிதாக இன்ஸ்டாகிராம் இணைய தள பக்கத்தில் இணைந்திருக்கிறார்.
இணைந்த கையோடு தன் தோழிகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். சமீப காலமாக மார்பிங் செய்யப்பட்ட நடிகைகளின் ஆபாச படங்கள் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியாகி நடிகைகளை கதிகலங்க வைக்கிறது. இந்நேரத்தில் அசின் இதில் இணைந்திருப்பதால் உஷாராக இருக்கும் தோழிகளும் ஹீரோக்களும் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் அசின் சற்று கலக்கத்துடன் இருக்கிறாராம்.
0 comments:
Post a Comment