↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிவகங்கையில் தந்தை ஒருவர் தனது மகள் காதலித்த குற்றத்திற்காக கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை எரித்துள்ளார்.
சிவகங்கை அருகே உடைகுளத்தை சேர்ந்த தங்கராஜ் (47), என்பவரது மகள் தமிழ்ச்செல்வி (19) கடந்த 3ம் திகதி உடல் எரிக்கப்பட்ட நிலையில், கொல்லப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நடந்த பொலிஸ் விசாரணையில், காதல் பிரச்னையில் அந்த பெண்ணை தந்தை தங்கராஜ் மற்றும் உறவினர்கள் கொன்று எரித்தது தெரியவந்துள்ளது.
தமிழ்செல்வியும் வேறொரு சமுதாயத்தை சேர்ந்த பூமிநாதனும் காதலித்து வந்தனர்.
இதற்கு தங்கராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தைக்கும்-மகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

தங்கராஜின் எதிர்ப்பையும் மீறி தமிழ்ச்செல்வி, பூமிநாதனுடன் பழகி வந்ததால் ஆத்திரமடைந்த அவர், 5 பேர் உதவியுடன் மகள் தமிழ்ச்செல்வியை எரித்து கொலை செய்தார்.
இந்த கொலை குறித்து சிவகங்கை தாலுகா பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் மகளை எரித்து கொலை செய்ததாக தங்கராஜ் சிவகங்கை தாலுகா பொலிசில் சரண் அடைந்தார்.

மேலும், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு உடந்தையாக இருந்த பாலமுருகன், கலைச்செல்வன், பாலமுத்து, தங்கமணி, தங்கபாண்டியன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று இரவு ஊருக்கு வெளியே உள்ள கொக்குபத்தை காட்டுப்பகுதிக்கு தனது மகளை தங்கராஜ் அழைத்து வந்தார். அவரை ஒரு மரத்தில் கட்டி மரக்கட்டைகளை அடுக்கினோம்.

அப்போது தான் அணிந்திருந்த நகைகளை கழற்றிகொடுத்த தமிழ்செல்வி தனது தந்தையிடம், என்னை உயிரோடு விடமாட்டீங்க, தம்பி, தங்கையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.
நான் தீயில் எரியப் போகிறேன், என் நகைகளை அவங்ககிட்ட கொடுத்துவிடுங்கள் என்றார். ஆனால் இதற்கும் அவரது தந்தை மனம் இளகவில்லை.

சிறிது நேரத்தில், விறகு கட்டையால் அந்த பெண்ணை தலையில் தாக்கி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்றோம்.

பின்னர் விறகுகளின் மேல் உடலை வைத்து பெட்ரோலை ஊற்றி எரித்ததோடு, ஒரு எலும்பு கூட மிஞ்சக்கூடாது என்பதற்காக, விடிய விடிய அங்கேயே இருந்தோம் என்று தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top