ஒன்ராறியோ மற்றும் மனிரோபா ஆகிய மாகாணங்களில் ஒரு காலத்தில் துணை கல்வி அமைச்சர் பதவி வகித்த பென்ஜமின் லெவின், குழந்தைகள் ஆபாசம் சம்பந்தமான மூன்று குற்றச்சாட்டுக்களை செவ்வாய்கிழமை ஏற்றுக்கொண்டார்.
1999 மற்றும் 2002 பகுதிகளில் மனிரோபாவில் மேம்பட்ட கல்வி துணை அமைச்சர் மற்றும் துணை கல்வி அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
மேலும், இவர் 2004-2007 கால பகுதிகளில் ஒன்ராறியோ துணை கல்வி அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
அத்துடன் ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின்னின் இடைக்கால குழுவிலும் அங்கம் வகித்துள்ளார்.
இவரது ஆன்லைன் நடவடிக்கைகள் விபரமாக ரொறொன்ரோ நீதிமன்றத்தில் விபரிக்கப்பட்டது.
63-வயதுடைய பென்ஜமின் லெவின் கைது செய்யப்பட்ட போது பல்கலைக்கழக பேராசிரியராக இருந்துள்ளார். அப்போது இவர் மீது ஏழு குழந்தை ஆபாச குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன என்று தெரியவந்துள்ளது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.