↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித் நடிக்கும் படங்களுக்கு முன்கூட்டியே தலைப்பு வைப்பதில்லை. படப்பிடிப்பு முடிவடையும்போதுதான் தலைப்பை அறிவிக்கின்றனர். 
அதுவரை ரசிகர்கள் அஜித்தின் எத்தனையாவது படம் என்பதைக் குறிக்கும் வகையில் தல 55, தல56 என்று குறிப்பிடுகின்றனர். ஊடகங்களும் அவ்வாறே எழுதுகின்றன. இதேபோல் தான் நடிக்கும் படத்தையும் ரசிகர்களும், ஊடகங்களும் குறிப்பிட வேண்டும் என்று விஷாலுக்கு விருப்பம் போலிருக்கிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு காவல் கோட்டம், வேட்டை மன்னன் என இரண்டு தலைப்பைகளை தேர்வு செய்து வைத்துள்ளனர். இரண்டில் எதை இறுதி செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பாண்டிய நாடு படத்திற்கு பிறகு விஷாலும், சுசீந்திரனும் இணைந்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை மதி கவனிக்க, டி.இமான் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் பெயரிடப்படாத அந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை சேத்துபட்டில் உள்ள செந்தூரப்பூவே பங்களாவில் துவங்கி நடந்து வருகிறது. இப்படம் குறித்த செய்தியை ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளனர். அதில் படத்தின் பெயராக விஷால் 19 என்று குறிப்பிட்டுள்ளனர்.

அஜித் ஆக ஆசைப்படுகிறாரா விஷால்!?

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top