↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எஸ்.எஸ்.பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள சிஎஸ்கே என்று கூறப்படும் 'சார்லஸ் ஷபிக் கார்த்திகா' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் வெளியானது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த படத்தின் பாடல் சீ  டியை கலைப்புலி எஸ் தாணு வெளியிட அதை இயக்குனர்கள் அட்லி மற்றும் ரஞ்சித் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

இந்த விழாவில் பேசிய தாணு, 'ரூ.1000 கோடி மதிப்புள்ள சிஎஸ்கே கிரிக்கெட் அணியின் விளம்பரத்தை இந்த படக்குழுவினர் இலவசமாக பெற்றுள்ளனர். இந்த டைட்டிலுக்கு யாராவது தடை கேட்டால்கூட அதுவும் இந்த படத்திற்கு ஒரு விளம்பரமாக அமையும் என்பதால் படக்குழுவினர்களுக்கு ஒரு பெரும் வெற்றி காத்திருக்கின்றது.

மேலும் பிரமாண்டமான படங்கள் மட்டுமே வெற்றி பெரும் என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. ஒரு படத்தின் முதுகெலும்பே கதைதான் என்றும் கதையில்லாத பிரமாண்டம் வெற்றியை கொடுக்காது என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியே கூறியுள்ளார். எனவே சிஎஸ்கே படத்தில் பிரமாண்டம் இல்லாவிட்டாலும் நல்ல கதையிருப்பதால் கண்டிப்பாக பெரும் வெற்றியை பெரும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று கூறினார்.

சரண்குமார், ஜெய் குஹேனி, மிஷால் நசீர், நாராயண், விமல் ஆதித்யா மற்றும் பலர் நடித்துள்ள சிஎஸ்கே படத்தை சத்தியமூர்த்தி சரவணன் இயக்குகிறார். இவர் பிரகாஷ்ராஜின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சித்தார்த் மோகன் இசையமைத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top