↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓ காதல் கண்மணி' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. அலைபாயுதே வரிசையில் இதமான காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல விநியோகிஸ்தர் தில் ராஜூ அவர்கள் பெற்றுள்ள நிலையில் தற்போது தமிழ் உரிமையும் வியாபாரமாகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பல வெற்றிப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வரும் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா, மணிரத்னம் அவர்களின் ''ஓ காதல் கண்மணி'' படத்தின் தமிழக உரிமையை டீசண்டான விலை கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

தல்கூர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன், ரம்யா, மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top