↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி பெயர் இடம்பெற்றுள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களில் அவரது பெயர் மட்டுமே இப்பட்டியலில் உள்ளது. 20015வவது ஆண்டுக்கான அதிக ஊதியம் பெரும் உலக விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், அமெரிக்காவின் குத்து சண்டை வீரர் ப்ளோய்ட் மேவெதர், கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் மற்றும் போர்த்துக்கீசிய கால்பந்ததாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய பிரபலங்கள் டாப்பிலுள்ளனர்.

டோணி 23வது ரேங்க் பிடித்துள்ளார். டோணியின் மொத்த வருவாய் 31 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதில் சம்பளமாக கிடைப்பது 4 மில்லியன் டாலர்களும், பிற வகை வருவாய்கள் 27 மில்லியன் டாலர்களுமாகும். "டோணி இந்தேிய கிரிக்கெட் அணியை உலக கோப்பை அரையிறுதி வரை கொண்டு சென்றவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6வது முறையாக பைனலுக்குள் கொண்டு சென்றவர்" என்று போர்ப்ஸ் பத்திரிகை டோணி பற்றி வர்ணிக்கிறது.

அமெரிக்க குத்துச் சண்டை வீரரான மேவெதர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் வருமானம், 300 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கடந்த 4 வருடங்கலில் 3வது முறையாக மேவெதர் முதலிடத்தை பிடித்துள்ளார். 2008ல் டைகர் உட்ஸ் 115 மில்லியன் டாலர் சம்பாதித்திருந்ததே ஒரு விளையாட்டு வீரரின் அதிகபட்ச வருவாயாக இருந்தது. அதை மேவெதர் முறியடித்துள்ளார்.

இந்த பட்டியலில் சோகம் என்னவென்றால், 2 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். ரஷ்யாவின் டென்னிஸ் பிரபலம் மரியா சரபோவா 26வது இடம் பிடித்துள்ளார். அவரது வருவாய் 29.7 மில்லியன் அமெரிக்க டாலர். நைக், ஹீட் போன்ற நிறுவனங்கள் அவருக்கு ஸ்பான்சர் செய்வதை போர்ப்ஸ் சுட்டிக் காட்டுகிறது.

ரேங்க் பட்டியலில் 2வது இடமும் பாக்சருக்குதான். அந்த இடத்தை போக்குயிடோ பிடித்துள்ளார். வருவாய் 160 டாலர்களாகும். கால்பந்து வீரர் ரொனால்டோ 79.6 மில்லியன் வருவாயுடன் 3வது இடத்திலும், டென்னிஸ் வீரர் பெடரர் 67 மில்லியன் டாலர்களுடன் 5வது இடத்திலும், ரபேல் நடால் 22வது இடத்திலும், கால்பந்தாட்ட வீரர் வைன் ரூனே 34வது இடத்திலும், ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் 73வது இடத்திலும் உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top