ஹொக்கி இந்தியா லீக் தொடரில் விளையாடி வரும் ராஞ்சி ரேஸ் அணி, சகாரா ஸ்போர்ட்டிங் அட்வென்ச்சர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி ஆகியோருக்கு சொந்தமானது.
அதே போல் உத்திரபிரதேச விசார்ட்ஸ் அணிக்கு, மற்றொரு கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா பங்குதாரர். இந்நிலையில் கடந்த சீசனில் ஹொக்கி இந்தியா லீக் தொடரில் விளையாடிய இந்த அணி வீரர்களுக்கு சம்பளப் பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த அணிகளுக்காக விளையாடி வரும் வீரர்களுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை இன்னமும் சம்பளம் கொடுக்க வேண்டியதுள்ளது.
அதேபோல் பயிற்சியாளர்கள், துணை ஊழியர்களுக்கும் சம்பள பாக்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய ஹொக்கி அணியின் மேலாளராக உள்ள ரோலண்ட் ஒல்ட்மென், கடந்த சீசனில் சுரேஷ் ரெய்னாவின் உத்தரபிரதேச விசார்ட்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர்.
அவர் சம்பளபாக்கி குறித்து கூறுகையில், தனக்கு சம்பள பாக்கியுள்ளது என்றும் ஆனால் அது குறித்து தான் கவலைப்படவில்லை எனவும் எப்போதாவது தருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
'ஹொக்கி இந்தியா' அமைப்பின் செயலாளர் நரீந்தர பத்ரா, இது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் வந்தால் ஹொக்கி இந்தியா அமைப்பு பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment