
விஸ்வரூபம் 2 படத்தில் நீருக்கடியில் நடக்கும் சண்டை காட்சியில் நடித்திருக்கிறேன். வேறு நடிகை யாராவது இதுபோல் செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. நடனத்தில் நான் பயிற்சி பெற்றிருக்கிறேன். விஸ்வரூபம் முதல் பாகத்தில் எனக்கு நடனம் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அப் செட் ஆனேன். அந்த குறை உத்தமவில்லன் படத்தில் தீர்ந்தது. தமிழில் வசனம் பேசுவதில் எனக்கு சிரமம் இருந்தது. என்னுடன் நடித்த ஆண்ட்ரியா வசனங்களை மனப்பாடம் செய்ய உதவினார். எனக்கு 100 படம் நடிக்க வேண்டும் என்று ஆசை கிடையாது. ஆனால் அனுபவங்கள் எல்லாவற்றையும் நடிப்பில் கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
0 comments:
Post a Comment