↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விக்ரம் பிரபு நடித்த 'இது என்ன மாயம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் ஆகிய படங்களை இயக்கிய ஜி.என்.குமரவேலன் இயக்கத்தில் 'வாஹா' என்ற படத்தில் நடிக்க விக்ரம்பிரபு ஒப்பந்தமாகியுள்ளார். இந்திய இளைஞன் ஒருவனுக்கும், பாகிஸ்தான் இளம்பெண் ஒருவருக்கும் ஏற்படும் காதலை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தின் முக்கிய சில காட்சிகள் வாஹா எல்லையில் படமாக்கப்படவுள்ளதாகவும், அதற்கான சிறப்பு அனுமதியையும் படக்குழுவினர் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது பத்து நாட்கள் காரைக்குடியில் நடைபெறும் படப்பிடிப்பில்  ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் இதையடுத்து 55 நாட்கள் தொடர்ச்சியாக குலுமணாலியில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மும்பை தொலைக்காட்சி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், தமிழுக்காக அவரது பெயர் மாற்றப்படவுள்ளதால் அவரது பெயர் மற்றும் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை என தொடர்வெற்றிகளை கொடுத்த விக்ரம் பிரபுவுக்கு இந்த படமும் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top