↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடித்த 'பூலோகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும் வெளிவராமல் இருக்கும் நிலையில் மீண்டும் அதே ஜோடி இணைந்துள்ள திரைப்படம் 'அப்பாடக்கர். இந்த படத்தில் நடிகை அஞ்சலியும் முக்கியகேரக்டரில் நடிக்கின்றார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வருவதாகவும், ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி ஆகியோர்களோடு விவேக்கும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பிற்கு பின்னர் வெளிநாட்டில் இரண்டு பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி, பிரபு, சூர்யா, விவேக், ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கி வரும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கின்றார். செந்தில்குமார் ஒளிப்பதிவும், செல்வா எடிட்டிங் பணியையும் கவனிக்கின்றனர். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top