↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின் சதித்திட்டம் போட்டு ஆட்சியில் நீடிக்க முயற்சித்த மகிந்த ராஜபக்ச, அந்த திட்டம் தோல்வியடைந்ததும் இனவாதத்தை தூண்டும் தந்திரத்தை பயன்படுத்தினார்.
இந்த நிலையில், பகிரங்க பொதுக் கூட்டம் ஒன்றில் நேற்று உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தொடர்ந்தும் இனவாதத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
தங்காலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற தொழிற்சங்க கருத்தரங்கொன்றில் கலந்து பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு மக்களுக்கு வாக்குரிமையை நானே பெற்றுக்கொடுத்தேன்.
அதனை பெற்றுக்கொடுத்திருக்காவிட்டால் நானே வென்றிருப்பேன் எனக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சவின் இந்த கருத்தானது மக்களை தவறாக வழிநடத்தும் இனவாதத்தை தூண்டும் கருத்தாகும்.
இலங்கை மக்களுக்கு 1931 ஆம் டொனமூர் அரசியலமைப்பு சீர்த்திருத்த யோசனை மூலம் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் 21 வயதுக்கும் மேற்பட்ட பிரஜைகளுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக்கொண்டால், வடக்கு, கிழக்கை தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் மகிந்த ராஜபக்சவுக்கு பாரியளவில் வாக்குகள் குறைந்திருந்தன.
உதாரணமாக அம்பாந்தோட்டை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், 2010 ஆம் ஆண்டு அவருக்கு 67.21 வீத வாக்குகள் கிடைத்ததுடன் கடந்த தேர்தலில் அது 63.02 வீதமாக குறைந்தது.
அத்துடன் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச, மொனராகலை மாவட்டத்திலேயே அதிக் கூடிய வாக்குகளாக 69.01 வீத வாக்குகளை பெற்றிருந்தார்.
எனினும் கடந்த தேர்தலில் அது 61.45 வீதமாக குறைந்தது. இதனை தவிர 2010 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் 61.66 வீத வாக்குகளை பெற்ற மகிந்த ராஜபக்ச, கடந்த தேர்தலில் 49.49 வீத வாக்குகளையே பெறமுடிந்தது.
2010 ஆம் ஆண்டு குருணாகல் மாவட்டத்தில் 63.08 வீத வாக்குகளை பெற்ற மகிந்த ராஜபக்ச, கடந்த முறை 53.46 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றார்.
அதேபோல் அனுராதபுரம் மாவடத்தில் 2010 ஆம் ஆண்டு 66.32 வீத வாக்குகளை பெற்ற அவர், கடந்த தேர்தலில் 53.59 வீத வாக்குகளையே பெற்றார்.
உண்மையான நிலைமை இப்படி இருக்கும் போது தனது அதிகார பேராசையில் இனவாத அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டு வரும் கருத்துக்கள் எதிர்காலத்தில் பாரிய ஆபத்தை உருவாக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top