↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சீனாவில் இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மனைவியை காப்பாற்ற அவரது கணவர் 147 முறை ரத்த தானம் செய்துள்ளார்.
சீனாவின் வடகிழக்கு ஜிலின்(Jilin) மாகாணம் அருகே வசிப்பவர் க்சூ வென்வூ(Xu Wenwu Age-45), இவரது மனைவி வாங் க்சியோயிங்(Wang Xiaoying Age-38) .
கடந்த 2003ம் ஆண்டு தனது கணவரின் கண்ணெதிரே திடீரென வாங் கீழே விழுந்ததால் அவர் பதற்றமடைந்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாங்கிற்கு இரத்தசோகை இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் வாங்கின் கைகள் செயலிழந்ததுடன், இரும்புசத்து குறைவால் ரத்தத்தில் சிகப்பு அணுக்கள் உருவாக்கும் தகுதியை அவரது உடல் இழந்துள்ளது.
எனவே அடிக்கடி ரத்தத்தை மாற்றினால் தான் அவரால் தொடர்ந்து உயிருடன் நடமாட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அப்போது மனைவிக்காக தனது ரத்தத்தை தர முன்வந்தார் வென்வூ. ஆனால் வென்வூவின் ரத்தமும் வாங்கின் ரத்தமும் வெவ்வேறாக இருந்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டில் தனது உறவினர்களுக்கு இலவசமாக ரத்த தானம் பெற, தனது ரத்தத்தை ஒருவர் தானம் செய்யவேண்டும் என சட்டம் ஒன்று உள்ளது.
அந்த சட்டத்தின் படி கடந்த 10 வருடங்களில் 147 முறை தனது ரத்தத்தை தானம் தந்துள்ளார் வென்வூ.
அதாவது ஒரு வருடத்துக்கு சராசரியாக 15 முறை ரத்த தானத்தை அவர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வென்வூ கூறுகையில், நான் ஒன்றே ஒன்றை தான் விரும்புகிறேன் என்றும் எங்களது வாழ்நாள் முடியும் வரை, எனது மனைவி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம் எனவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top