↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மிஷ்கின் தனது சிஷ்யனுக்காக எடுக்கும் புதிய முயற்சி ! - Cineulagam
‘பிசாசு’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் இயக்குனர் மிஷ்கின் தனது நெடுநாளைய சிஷ்யர் வடிவேல் இயக்கியுள்ள ‘கள்ளப்படம்’ என்ற படத்தை தனது 'Lone Wolf Productions' சார்பில் வெளியிடுகிறார். இப்படம் இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மிஷ்கின் கூறும்போது,
‘‘கள்ளப்படம்’ படத்தை பார்த்தேன். என்னை பொறுத்த வரையில் இப்படம் தமிழ் சினிமாவின் தரமான படங்களின் பட்டியலில் இடம்பெறும். வடிவேல் எனது சிஷ்யன் என்று கூறி பெருமிதம் கொள்ளும் அதேவேளையில், இப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
லக்ஷ்மி ப்ரியா, இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளர் காஜின், வடிவேல் ஆகியோரது இந்த கூட்டணி வெற்றிபெறும்’’ என்றார்!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top