↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பிரபல நடிகை ஒருவர் இழந்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஜெயம் ரவியின் தீபாவளி, அஜீத்தின் 'அசல்', வினய் நடித்த ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்த நடிகை பாவனாவிடம் புலி' படக்குழுவினர் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க அணுகியதாகவும், ஆனால் அந்த சமயத்தில் அவர் வேறு ஒரு முக்கிய பணிக்காக அமெரிக்காவில் இருந்ததால், அந்த வாய்ப்பை இழந்ததாகவும், அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பாவனா மிஸ் செய்த கேரக்டரில்தால் நந்திதா ஸ்வேதா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை பாவனா தற்போது நான்கு மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment