↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தெலுங்கில் இரு தினங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள டெம்பர் படத்தின் மூலம் படத்தின் நாயகனான ஜுனியர் என்டிஆர் பேசப்படுவதைப் போலவே படத்தின் நாயகியான காஜல் அகர்வாலும் பேசப்படுகிறார். தெலுங்கைப் பொறுத்தவரையில் ஹீரோயின்கள் பாடல்களிலும், காதல் காட்சிகளிலும்தான் அதிகம் இடம் பெறுவார்கள். அதிலேயே கிளாமராலும், நடனத்தாலும், துடிப்பான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்து விடுவார்கள்.

தெலுங்குத் திரையுலகில் தற்போது ஹீரோயின்களுக்கிடையே பலமான போட்டி இருந்து வருகிறது. ஒரு படம் வெற்றியடையும் போதுதான் அவர்களுக்கு இன்னும் அதிகமான படங்கள் கிடைக்கும். டெம்பர் படத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பை விட அவருடைய கிளாமரும், உடை அலங்காரமும் அதிகம் பேசப்படுகிறதாம். அவருக்குப் படத்தில் கிடைத்துள்ள பெயரையும், புகழையும் கண்டு மற்ற நடிகைகளே கண்டிப்பாக பொறாமைப்படுவார்கள் என்கிறார்கள்.

தமிழை விட தெலுங்கில் ஹீரோயின்களை அழகாக காட்டுவதற்கும், அவர்களுடைய ஆடை அலங்காரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். காஜல் அகர்வால் நல்ல உயரம் என்பதால் அவர் தெலுங்கில் இளம் முன்னணி கதாநாயகன்களுடன் ஜோடி சேரும் போது மிகவும் பொருத்தமாக இருப்பார். இந்த டெம்பர் படத்தைப் பொறுத்தவரையில் காஜல் அகர்வால் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top