↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014ஆம் வருடம் வெளிவந்த கோலிசோடா' மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம். ஸ்டார் வேல்யூ இல்லாமல் சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்களில் ஒன்று. வெறும் ரூ.2 கோடியில் மட்டுமே தயாரான இந்த படம் ரூ.20 கோடி லாபத்தை அதன் தயாரிப்பாளருக்கு பெற்று தந்தது.

நான்கு சிறுவர்களை சுற்றியே அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் பணியாற்றிய பலர் புதுமுகங்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்திற்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது.

பாரீஸில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விழாவில் (South Asian Alternative Film Festival in Paris) கோலிசோடா உள்பட பல இந்திய மற்றும் ஆசிய திரைப்படங்கள் கலந்து கொண்ட நிலையில் கோலி சோடா படம் சிறந்த படமாக நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கோலி சோடா படத்தை நடுவர்கள் பாராட்டியதாகவும், இந்த படத்திற்கு கிடைத்த விருதை மிகவிரைவில் அனுப்பி வைக்க உள்ளதாகவும், தெற்காசிய திரைப்பட விழாவின் நிர்வாகிகள் இயக்குனர் விஜய் மில்டனுக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் மில்டன் தற்போது விக்ரம், சமந்தா நடிப்பில் '10 எண்றதுக்குள்ள' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top