↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலக நாயகன் கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' மற்றும் கார்த்தி நடித்த 'கொம்பன்' ஆகிய திரைப்படங்கள் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த இரு படங்களின் வியாபாரங்களும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

உத்தம வில்லன், கொம்பன் ஆகிய இரு படங்களின் கேரள மாநில தியேட்டர் உரிமையை காளீஸ்வரி பிலிம்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது முதலே கேரளாவில் உள்ள தியேட்டர்களை இந்த இரண்டு படங்களுக்காக புக் செய்யும் வேலையை இந்த நிறுவனம் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

விஸ்வரூபம் படத்திற்கு பின் வரும் கமல் படம் என்பதாலும், மெட்ராஸ் வெற்றிக்கு பின்னர் வரும் கார்த்தி படம் என்பதாலும் இரு படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் அதிகளவிலான தியேட்டர்கள் கண்டிப்பாக புக் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஜெயராம் ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ள 'உத்தம வில்லன் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரித்துள்ளார். அதேபோல், கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், உள்பட பலர் நடித்துள்ள கொம்பன் படத்தை முத்தையா இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
இந்நிலையில் கொம்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழா  மாரிச் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உத்தம வில்லன் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top