↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியில் 4 வீரர்கள் டக்-அவுட் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளனர்.
நியூசிலாந்து- ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் கலம் மேக்லியோட் மற்றும் ஹமிஸ் கார்டினர் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சிலும், பிரெஸ்டன் மோம்சென், டிம் சவுத்தி பந்து வீச்சிலும், இயான் வார்ட்லா, டேனியல் வெட்டோரி பந்து வீச்சிலும் டக்- அவுட் ஆனார்கள்.
உலகக்கிண்ணத் தொடரில் ஒரு அணியில் 4 வீரர்கள் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறியது ஒரு மோசமான சாதனையாகும்.
இந்த நிலைமை 1999ல் இலங்கைக்கும், 2003ல் பாகிஸ்தானுக்கும் நடந்துள்ளது. அந்த வரிசையில் ஸ்காட்லாந்தும் சென்று சேர்ந்துள்ளது.
இவர்கள் அனைவருமே, சொல்லி வைத்தது போல எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top