
மலையாளத்தில் ஸ்கூல்பெண்ணாக அமலாபால் நடித்து வெளிவரப் போகும் ‘மைலி’, டப்பிங் வேலை முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. அதற்குப் பிறகு படங்கள் இல்லையென்றாலும், விளம்பரப் பொருள்களின் லாஞ்ச், கடைத் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார் அமலா. அண்மையில் பிரபல வாஷிங் பவுடர் பொருள் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமலாபால், ‘‘துணி துவைப்பது பெண்களின் வேலை மட்டும்தானா?’’ என்று ப்ரஸ் மீட்டில் வெகுண்டெழுந்தார்.
மேலும் அவர், ‘‘எனக்குத் தெரிந்த ஒரு சர்வேயின்படி சென்னையில் மட்டும் 96% சதவிகிதம் பெண்கள், யாருடைய உதவியும் இல்லாமல் தனியாகவே வீட்டு வேலைகளைச் செய்து கஷ்டப்படுகிறார்களாம். கணவர்கள் துளிக்கூட உதவுவது இல்லை. இந்தியா முழுவதும் 76% சதவிகிதம் பெண்கள் தனியாகக் கஷ்டப்படுகிறார்கள் என்றும் சொல்கிறது அந்த சர்வே. வீட்டு வேலைகள் செய்வதற்கு மட்டுமே பெண்கள் படைக்கப்படவில்லை. கணவர்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளவில்லையென்றாலும், ‘சூப்பர்’, ‘சமையல் லவ்லி’, ‘நல்லா துவைச்சிருக்கியே’ என்று அட்லீஸ்ட் சின்னச் சின்னப் பாராட்டுக்களையாவது கொடுங்கள்.
கணவர்களிடமிருந்து பெண்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்! இந்த வகையில் நான் பாக்கியசாலி! என் கணவர் விஜய், என் துணிகளைத் துவைப்பதிலிருந்து சமைப்பது வரை வீட்டு வேலைகளில் நான் எதிர்பார்த்தததை விட எனக்குப் பக்கபலமாக இருக்கிறார். . விஜய் என் கணவராகக் கிடைக்க நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஐ லவ் யூ விஜய்!’’ என்று காதலில் பொங்கினார் அமலாபால்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.