↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய், அஜித் விநியோகஸ்தர்கள் கையில் சிவகார்த்திகேயன் - Cineulagam
சிவகார்த்திகேயன் வளர்ச்சியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் இவர் நடிப்பில் காக்கிசட்டை படம் இம்மாத இறுதியில் வரவிருக்கிறது.
இப்படத்தை கோவையில் காஸ்மோ பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது. இந்நிறுவனம் பெரும்பாலும் விஜய், அஜித் படங்களையே வெளியிட்டுள்ளது.
விஜய் நடித்த துப்பாக்கி, அஜித்தின் ஆரம்பம், என்னை அறிந்தால் ஆகிய படங்களை வெளியிட்ட இவர்கள் தற்போது காக்கிசட்டை படத்தை பிரமாண்டமாக கோவையில் வெளியிடவிருக்கிறார்கள்.
இப்படம் கோவையில் மட்டும் சுமார் 50 தியேட்டர்களில் வருவதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top