ஏதோ சிம்புவும் செல்வராகவனும் இப்போதுதான் ஜாயின் பண்ணப் போகிறார்கள் என்பது போல வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
இரண்டு ஈகோயிஸ்டுகள் இணையும் இந்த படம், காற்புள்ளியை தாண்டி அரைப்புள்ளிக்கு வந்து, அதற்கப்புறம் திரைக்கு வருகிற காலம் என ஒன்று இருந்தால், அதுதான் தமிழ்சினிவாவின் வசந்த காலமாக இருக்கும். ஏன்? காற்று மழை இடி புயல் எல்லாவற்றையும் கடந்து ஒரு கையளவு பஞ்சு மிட்டாய் வெளிவருவதும், இவர்கள் இருவரும் இணைந்து அந்த படத்தை வெளியே கொண்டு வருவதும் கிட்டதட்ட ஒன்றுதான்.
எப்பவோ துவங்கப்பட்ட இந்த படத்திற்கு ஒரு நாள் ஷுட்டிங் வைக்கப்பட்டு அது ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட்ட தகவலையும் அப்போதே எழுதியிருந்தோம். அண்ணனுக்காக தனுஷே இப்போது இந்த படத்தை தயாரிக்கப் போகிறார் என்றொரு செய்தி வந்ததல்லவா? தனது கையிலிருந்து பணத்தை போடாமல், தன் பெயரில் வேறொருவரின் பணத்தை இறக்கும் திட்டத்தோடுதான் இவ்விரு மேதைகளின் இணைப்பை அறிவித்தாராம் தனுஷ். ஆனால் ஒட்டுமொத்த தமிழகமே ஒரேயடியாக விழித்துக் கொண்டது போல எவரும் சிக்கியபாடில்லை. அப்படியொரு பெரிய மனிதர் வராத வரைக்கும் இத்திட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்வது டவுட்தானாம்.
எவ்வளவு அடிச்சாலும் தாங்குற பொறுமைசாலி இருந்தால் பிரதிபலன் பார்க்காமல் விண்ணப்பிக்கலாம்!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.