சில வருடங்களுக்கு முன்பு வரை நடிப்பில் பிஸியாக இருந்த நமீதா இப்போது தன் மார்கெட்டை இழந்து நகைக் கடை திறப்பு விழாக்களுக்கு சென்றும் சின்னத் திரை நடுவராக இருந்தும் காலத்தை ஓட்டிவருகிறார்.
இந்நிலையில் அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் ஒரு நடன நிகழ்ச்சிக்கு புக் செய்துள்ளனர். நமீதாவும் தன் தாய் மாநிலத்தின் மீதுள்ள பாசத்தில் நிகழ்ச்சிக்கான பேமண்ட் பற்றி அலட்டிக்கொள்ளாமல் உடனே ஒப்புக்கொண்டுள்ளார். மிகவும் கர்மசிரத்தையுடன் நடன அசைவுகளை ஒத்திகைப் பார்த்த அவர், குஜராத் சென்று நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனமாடியுள்ளார்.
பின்பு தன் ஹோட்டல் அறைக்கு திரும்பியவர் தனக்கு தர வேண்டிய பேமண்டை செட்டில் செய்வதற்காக தன்னை புக் செய்த நிகழ்ச்சி அமைப்பாளருக்கு போன் போட்டுள்ளார்.” போன் சுவிட்ச் ஆப்” என பதில் வரவே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் அலுவலகத்தை தேடி சென்றுள்ளார். அங்கு பெரிய பூட்டு ஒன்று அவரை பார்த்து பல்லிளித்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நமீதா மனம் நொந்து சென்னைக்கு திரும்பியுள்ளார்.
இதனால் ஞானோதயம் பெற்றுள்ள நமிதா இனி எந்த நடிகையும் யாரையும் நம்பி பேமண்ட் வாங்காமல் எந்த நிகழ்ச்சியையும் ஒப்புக்கொள்ளகூடாது என இலவசமாக அறிவுரை வழங்கி வருகிறார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.