↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மொபைல், கணினி, மென்பொருள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது சீக்ரட் லேப்பில் மிகவும் ரகசியமாக வைக்கபட்டு இருந்த எலக்ட்ரிக் கார் திட்டத்தை பற்றிய தகவல்களை அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் மினிவேன் வடிவமைப்பில் ஈடுப்பட்டுள்ளது, இந்த பணிகள் முடிவடைய சில வருடங்கள் ஆகும் என இப்பத்திரக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்நிறுவனம் கார் தயாரிப்பில் இறங்க உள்ளதா என்பது திட்டவட்டமாக தெரியவில்லை.

ஆப்பிள் நிறுவனம் பல வருடங்களாக ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் இக்கார் தயாரிப்பு வெளிவரும் பட்சத்தில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான திகழும் கூகிள், பென்ஸ், பிஎம்டபள்யூ, டெஸ்லா போன்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டி அளிக்க உள்ளது.

மேலும் இன்றைய கார் தயாரிப்பு மெக்காணிக்கள் இயத்திரங்கள் மட்டும் அல்லாமல் தொழில்நுட்பம் சார்ந்த பல முக்கிய அமைப்புகள் உள்ள அடங்கியதாக உள்ளது. இந்நிலையில் கார் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனத்தின் தாக்கம் அதிகளவில் இருக்கும்.

2014ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் கார்பிளே என்னும் புதிய ஆப்பை வெளியிட்டது. இதனை கொண்டு கார் ஒட்டுபவர் எளிதாக ஸ்டீயரிஙில் இருந்து கையை எடுக்காமல் போனில் பேசவும், வாய்ஸ் மெயிலை கேட்கவும் முடியும்.

மேலும் சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனம் ரோப்படிக்ஸ் நிறுவனத்தை கைபற்றியது. மேலும் இந்நிறுவனத்தின் சீக்ரட் லேப்ஸ் பிரிவிற்கு நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இருந்து வல்லுனர்களை தொடர்ந்த நிறுவனத்துடன் இணைத்து வருகின்றது ஆப்பிள் நிறுவனம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top