↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கேள்வி குறியான விஷாலின் கால்ஷீட்


















எதிர்நீச்சல் படத்தின் மூலம் புகழடைந்த துரை செந்தில்குமார், தனுஷின் வொண்டர்பார் ஃப்லிம்ஸ் தயாரிக்கும் காக்கிச் சட்டை படத்தை இயக்கியுள்ளார். தனது அடுத்த படத்தில் விஷாலை இயக்கப்போவதாக தற்போது உறுதி செய்யப்படாத தகவல்கள் கசிகின்றன. 
விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துவருகிறார். அப்படத்தில் விஷால் போலிஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். காக்கிச் சட்டை படத்தின் ரிலீசுக்குப் பின் விஷால் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது. 
ஜிகர்தண்டா படத்தை தயாரித்த கதிரேசனுடன் விஷாலின் விஷால் ஃப்லிம் ஃபாக்ட்ரி இணைந்து அப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே ஆம்பள படத்தின் வெற்றிக்குப்பின் இயக்குனர் சுந்தர். சி படத்தில் நடிக்க விஷால் ஏற்கனவே உறுதியளித்துள்ளார்.  

விஷால் தனது அடுத்த படத்தின் கால்ஷீட்டை யாருக்கு அளிப்பார் என்பதே தற்போது கோலிவுட்டில் வலம் வரும் கேள்வி.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top