↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கவுள்ள 'இறவி' படம் ஒரு மல்டி ஸ்டார் திரைப்படம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே பாபிசிம்ஹா முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர்களும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படம் திகில் மற்றும் மர்மங்களுடன் கூடிய ஒரு சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் இறவி படத்திற்கு சந்தோஷ் சுப்பிரமணியன் இசையமைக்கின்றார். ஜிகர்தண்டா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கேவ்மிக் யூ ஆரி இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். 

இந்த படத்தின் ஹீரோயின் உள்பட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறவுள்ளது என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top