திருமண நாளன்று மணமகனை தனிமைப்படுத்திவிட்டு மணமகளை மாமியார் வீட்டுக்கு கடத்திச் சென்று, மணமகளுடன் முதலிரவு அனுபவித்த வாலிபருக்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது கேகாலை மேல் நீதிமன்றம். அத்துடன், 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை விதித்தார். அதுதவிர, மணமகளுக்கும் 50 ஆயிரம் ரூபாவை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாலிபர் மணப்பெண்ணின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட மேற்படி யுவதி, முதலிரவுக்காக கணவனுடன் ஹோட்டலொன்றுக்குச் சென்றிருக்கிறார்.
இதன்போது அந்த ஹோட்டலுக்குச் சென்ற மேற்படி சந்தேகநபரான மைத்துனர், மணமகளின் சகோதரிக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது என்று கூறி, புதுமணத் தம்பதியை வைத்தியசாலையொன்றுக்கு அருகில் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், வைத்தியசாலை வாசலிலேயே அவர்களை நிறுத்திவிட்டு, சாப்பாடு வாங்கி வருமாறு மணமகனை, கடையொன்றுக்கு அனுப்பிவைத்துள்ளார். புதுமாப்பிளையும் மனைவியின் சகோதரிக்கு சாப்பாடு வாங்க ஓடிச் சென்றுள்ளார். இந்த சமயத்தில் மணமகளை அவரது சம்மதமின்றி தனது வீட்டிற்கு கடத்திச் சென்று, அங்கு வைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார்.
தனது புது மனைவியைக் காணாது நகரின் அனைத்து பிரதேசங்களிலும் தேடியுள்ள மணமகன், பின்னர் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையிலேயே மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டிருந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.