↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
துறு துறு பேச்சு, விறு விறு வளர்ச்சி! டிடி ஸ்பெஷல் - Cineulagam
ஒரு இடத்தில் ஒருவர் இருந்தால் அந்த இடமே செம்ம கலாட்டா ஆகிவிடும் என்றால் அவர்களை நாம் தவிர்ப்போமா?. அப்படி ஒரு ஜாலி கேர்ள் தான் Professor டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. ஆமாங்க நம்ம டிடி சுற்றுலா துறைக்கான பிரிவில் முன்னணி கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருக்கிறார்.
அதெல்லாம் நமக்கு எதுக்கு, டிடி என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது கலகல பேச்சு, கலாட்டா செய்யும் குணம் தான், தன் துறு துறு பேச்சால் தமிழ் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகம் எங்கு வாழும் பல தமிழ் மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர்.
ஆனால், டிடி க்கு பேச வராதாம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆமாம், இவருக்கு சிறு வயதில் பேசவே வராதாம், அத்தனை அமைதியான இவர் இன்று தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் வரும் விருந்தினர்களை பேச விடாமல் அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு கலங்கடித்து விடுவார்.
இவர் சினிமாவில் நள தமயந்தி, விசில் போன்ற படங்களில் சிறு வேடத்தில் தோன்றினாலும், சின்னத்திரை தான் இவர் கனவின் கதவை திறந்தது. தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொடர்ந்து 16 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றாலே, அதை பார்க்க தமிழக மக்கள் தொலைக்காட்சி பெட்டியின் முன் வந்து விடுவார்கள். அந்த அளவிற்கு தன் கலகலப்பான பேச்சால், ரசிகர்களை கவர்ந்து இழுத்து விடுவார்.
நீண்ட நாட்களாக டிடி தமிழக மக்களுக்கு வைத்த ஒரே சஸ்பென்ஸ் இவர் யாரை காதலிக்கிறார் எப்போது திருமணம் என்று தான். ஆனால், அதிலும் சரவெடியாக டிடி, இயக்குனர் கௌதம் மேனன் அவர்களிடம் பணிபுரிந்த ஸ்ரீகாந்த் என்பவரை சென்ற வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் நாட்டின் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் தொடர்ந்து 4 வருடங்களாக சிறந்த தொகுப்பாளர் என்ற விருதை பெற்று வருகிறார் டிடி. பெண்கள் என்றாலே பேசாமல் வீட்டிற்குள் அடங்கி இருக்கும் இந்த காலத்தில், அவர்களுக்கெல்லாம் ஒரு ரோல் மாடலாக இருக்கும் டிடி என்றும் ஒரு சாதனை பெண் தான்.
இன்று போல் என்றும் இவர் தன் கேரியரில் மட்டுமில்லாமல், வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருக்க இந்த பிறந்த நாளில் இவருக்கு 
எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top