↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தோடு சேர்ந்து, நாமும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நம் கண்களுக்கு தென்படும் உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிட்டு விட்டு அலுவலகங்களுக்கு செல்கிறோம்.
பின்னர், வீடு திரும்பும்போதும் கூட ஏதேனும் துரித உணவகங்களில், இரவு உணவை முடித்து விடுகிறோம்.
சிலருக்கு, இந்த உணவுகள் ஒத்துப்போனாலும், பலருக்கு அதுவே விஷமாகி விடுகிறது (Food Poison).
இவ்வாறு ஏற்படும் பிரச்சனையை தீர்க்க சில மருத்துவங்கள் இதோ,
இஞ்சி சாறு
இஞ்சி சாறினை தேனில் கலந்து உட்கொள்ளலாம். அல்லது இஞ்சியை தேனில் தொட்டு மென்று சாப்பிடலாம். அது முடியாதவர்கள் இஞ்சி கலந்த தேனீரை அருந்தலாம், இவ்வாறு செய்வதால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
சீரகச் சாறு
சீரகப் பொடி சேர்த்து சூப் குடிப்பது அல்லது சீரகத்தை நன்கு வறுத்து, அதில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதனை அருந்துவதால் வாந்தி நிற்கும்.
துளசிச் சாறு
துளசியை வெறுமனே எடுத்து வாயில் போட்டு மென்றால் கூட உடனடியாக அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.
புட் பாய்சன் அதிகமாக இருந்தால், துளசிச் சாறினை வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது, உணவு உண்ட பிறகு ஏற்படும் பிரச்சனையாக இருப்பின், துளசிச்சாறு எடுத்து அதனை தேனுடச் சேர்த்து சாப்பிடலாம்.
எலுமிச்சை சாறு
புட் பாய்சனால் வயிற்றில் ஏற்பட்ட கிருமிகளை அழிக்கும் ஆற்றல் எலுமிச்சை சாறுக்கு உள்ளது.
எனவே, எலுமிச்சை சாற்றை உப்பு கலந்து குடித்தால் வயிற்று உபாதைகள் குறையும். மேலும், வயிற்று உபாதையால் அவதிப்படுவோர் எலுமிச்சை சாறு குடிப்பதால் உடனடியாக புத்துணர்ச்சி அடைய முடியும்.
புதினாச் சாறு
புதினாச் சாறு வயிற்று உபாதைகளுக்கு நல்ல மருந்தாகும். அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு.
புதினாச் சாறை டீயுடன் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அஜீரணக் கோளாறு அதிகமாக இருப்பவர்கள் புதினாச் சாறு எடுத்தும் குடிக்கலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top