↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், சிக்சர் அடிப்பதில் டிவில்லியர்சும், பவுண்டரி விளாசுவதில் சங்கக்காராவும் முதலிடம் பிடித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணியின் அணித்தலைவர் டிவில்லியர்ஸ், 6 போட்டிகளில் 20 சிக்சர்களை விளாசியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் 18 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தையும், நியூசிலாந்து அணித்தலைவர் பிரெண்டன் மெக்கல்லம் 12 சிக்சர்களுடன் 3வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பவுண்டரி விளாசுவதில் இலங்கை வீரர் சங்கக்காரா முதலிடத்தில் உள்ளார். இவர் 6 போட்டிகளில் 54 பவுண்டரிகளை அடித்துள்ளார்.
மற்றொரு வீரர் டில்ஷான் 46 பவுண்டரிகளுடன் இரண்டாவது இடத்தையும், ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் 43 பவுண்டரிகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top