↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்தி நடிகை ராக்கி சாவந்த், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோஹ்லியை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராக்கி சாவந்த், விராட் கோஹ்லியை தான் காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், விராட் கோஹ்லியும் காதலிப்பது ஊர் அறிந்த விடமாக இருக்கலாம்.
ஆனால் கோஹ்லி தனது காதலை ஒப்புக் கொண்ட போதிலும், அனுஷ்கா மட்டும் அது பற்றி பேசுவதே இல்லை.
அனுஷ்கா சர்மா கோஹ்லியின் காதலை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் நான் என் காதலை கோஹ்லியிடம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாலிவுட்டில் நுழைந்து தனது கவர்ச்சியால் அனைவரையும் கவர முயன்ற ராக்கி சாவந்த், பின்னர் படவாய்ப்புகள் இல்லாமல் புது கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு மண்ணை கவ்வியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top