ரஜினிகாந்த், ஸ்ரீதேவி போன்றவர்கள் தங்கள் பெயரை பட டைட்டிலுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தன் பெயரை பட தலைப்பில் பயன்படுத்த¤ய Ôமை ஹுன் ரஜினிகாந்த்' இந்தி படத்துக்கு தடை கேட்டு ரஜின¤ கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். இந்நிலையில் தெலுங்கு படமொன்றிற்கு ‘வேர் இஸ் வித்யாபாலன்Õ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பிரின்ஸ். ஜோதி செத் நடிக்கின்றனர். ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ‘பட டைட்டிலில் வித்யா பாலன் பெயரை பயன்படுத்துவதற்கு அவரிடம் அனுமதி வாங்கி விட்டீர்களா?‘ என்று பட யூனிட்டில் விசாரித்தபோது, ' இந்த படத்தில் வித்யா பாலனை தவறாக காட்டும்படி எந்த காட்சியும் இல்லை. ஆனால் அவர் பெயரை சுற்றி கதை செல்கிறது. இதற்காக வித்யா பாலனிடம் அனுமதி வாங்க தேவையில்லை.
இது பட டைட்டில்தான். மேலும் எங்கள் படத்தின் கவனத்தை ஈர்க்க வித்யா பாலன் பெயர் பயன்பட்டால் அதை ஏன் அவர் தவறாக கருத வேண்டும். பலரது கவனம் இந்த பெயரால் ஈர்க்கப்படுவதால் அவர் சந்தோஷம்தான் அடைய வேண்டும்' என்றனர். இதுபோல் ஆளாளுக்கு பிரபல நடிகர், நடிகைகளின் பெயர்களை பயன்படுத்தினால் அதை வைத்து மீண்டும் யாராவது தங்களது பெயர்களை பயன்படுத்தலாம் என ரஜினி, ஸ்ரீதேவி தரப்பு கவலை அடைந்துள்ளது. வித்யாபாலன் இந்த தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த தரப்பு எதிர்பார்த்தது. ஆனால் அவர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் வ¤த்யா.இது பற்றி வித்யாபாலன் கூறும்போது, ‘இந்த படம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் முழு சப்ஜெக்டும் தெரியாது. எனது பெயரை பயன்படுத்துவது பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது' என்றார்.
0 comments:
Post a Comment