வி.வி.ஆர். சினி மாஸ்க் புரொடெக்சன்ஸ் சார்பில் வி.வெங்கட்ராஜ் தயாரிப்பில் சின்னத்திரை இயக்குநர் எஸ்.என்.சக்திவேல் இயக்கியிருக்கும், ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ திரைப்படம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று 118 தியேட்டர்களில் ரிலீஸான இந்தப் படம் கடந்த ஞாயிறு முதல் 20 தியேட்டர்கள் கூடுதலாகக் கிடைக்கப் பெற்று 138 தியேட்டர்கள் கிடைத்திருந்தன. இப்போது நாளை முதல் மிக அதிகமாக 300 தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளது.
“படத்தில் நான் கடவுள் ராஜேந்திரனின் நான் ஸ்டாப் காமெடி பட்டிதொட்டியெங்கும் பரவி, அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்திழுத்துவிட்டது. திரும்பத் திரும்ப படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய முதல் படமே இந்த அளவுக்கு வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும், தொடர்ந்து படங்களைத் தயாரிக்க வேண்டும் என்கிற தைரியத்தையும் எனக்குள் தந்திருக்கிறது. நாங்கள் ஜெயிப்போம் என்று நம்பினோம். எங்களது நம்பிக்கையை படத்தின் கதையில் வைத்திருந்தோம். இப்போது கைதட்டல்களை அள்ளிக் கொண்டிருக்கிறோம்..” என்று சொல்லி பூரிப்படைகிறார் தயாரிப்பாளர் வி.வெங்கட்ராஜ்.
0 comments:
Post a Comment