
சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, சிபி, அதர்வா என ஹீரோக்களின் வாரிசுகள் கோலிவுட்டில் களத்தில் குதித்திருந்தாலும் ஹீரோக்களின் பெண் வாரிசாக கமல் மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா, அர்ஜுன் வாரிசாக ஐஸ்வர்யா போன்றவர்களும் களத்தில் குதித்துள்ளனர். இவர்களில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார் ஐஸ்வர்யா. பட்டத்து யானை படத்தில் நடித்தவருக்கு எதிர்பார்த்த பிரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து புதிய படத்தில் நடிக்காமல் இடைவெளி விட்டிருந்தார்.
இது பற்றி ஐஸ்வர்யா கூறும்போது, ‘அடுத்து அப்பா அர்ஜுன் இயக்கத்தில் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழியில் உருவாகும் இப்படத்தில் கதக் நடனம் ஆடும் கதாபாத்திரம். நடனம் ஆடத் தெரிந்தாலும் கதக் தெரியாது. அதற்கு பயிற்சி எடுத்து வருகிறேன். முதல் படத்துக்கு பிறகு இந்தி படம் வந்தாலும் ஏற்கவில்லை. நல்ல படம் வந்தால் நடிப்போம், மொக்கை படத்தில் நடிப்பதற்கு வேறு வேலை பார்க்கலாம் என்று பேஷன் டிசைனிங் கற்றேன். அதற்கு உடனடி பலனாக அப்பா இயக்கும் படத்தில் பேஷன் டிசைனிங் பொறுப்பு கிடைத்தது. லண்டன் சென்று படித்தது வீணாகவில்லை‘ என்றார். 90களில் தனது மார்க்கெட் குறைந்தபோது தன் படத்தை தானே இயக்கிய அர்ஜுன் அடுத்து மகளை நிலைநிறுத்துவதற்காக அவர் நடிக்கும் படத்தின் இயக்குனர் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.