எப்பவுமே சினிமாவுல ஒரு படம் ஆரம்பிக்கிறது கூட சுலபமான விஷயமாக இருக்கிறது, ஆனால் அந்த படத்தை முடித்து அதை ரிலீஸ் வரைக்கும் கொண்டுபோகிற சுமை இருக்கே அது இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மட்டுமே தெரியுமே. சினிமாவில் நடிக்க வரும் ஹிரோக்கள் ஆரம்பத்தில் எனக்கு தேவை ஒரு ஹிட் என்ற ரேஞ்சில் தான் உழைக்கிறார்கள், அப்படி ஒரு ஹிட் கொடுத்துட்டா கண்டிப்பா அடுத்த இரண்டு அல்லது மூன்று வருஷத்துக்கு சினிமாவுல நல்லா சம்பாதிச்சிடலாம் என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு ஹிட் கொடுத்த பிறகு எனக்கு அந்த ஹிரோயின் தான் ஜோடியா நடிக்கணும் என்று மாமா வேலை செய்யும் அளவுக்கு அலையவிடுவார்கள்.
இப்படி செய்த பலர் இன்று சினிமாவில் ஒரு தூசியாக கூட கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போயிருக்கிறார்கள். இதையெல்லாம் ஏன் நான் சொல்றேன்னா, சூர்யாவும், விஜய்யும் கௌதம் மேனனை அலையவிட்டு பின் அல்வா கொடுத்தவர்கள் என்று அனைவருக்கும் தெரியும், ஆரம்பத்தில் யோஹன் அத்தியாயம் ஒன்று கதையை விஜய்க்காக உருவாக்கி கௌதம், அதன்பின் அப்படத்திலிருந்து விஜய் விலகிக் கொள்ள அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவரை அழைத்து வாய்ப்பு தருகிறேன் என்று கூறி தோளில் தட்டிக் கொடுத்தார் சூர்யா, இதனை நம்பிய கௌதமனும் சூர்யாவுக்காக துருவ நட்சத்திரம் என்ற கதையை தயார் செய்து வைக்க உடனே சூர்யா கதையில் பல மாற்றங்களை கூற ஒருகட்டத்தில் டென்ஷனான கௌதம் மேனன் இந்த படமும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் என்ற அளவுக்கு மனம் நொந்து காணப்பட்டார்.
ஆனால் என்னை அறிந்தால் ஹிட்டுக்குபிறகு மீண்டும் அந்த இரண்டு கதையை தூசி தட்ட ஆரம்பித்திருக்கிறார் கௌதம் மேனன், விக்ரம் கால்ஷீட்டை கையில் வைத்துக் கொண்டிருக்கும் இவர், யோஹனை எடுக்கலாமா, துருவ நட்சத்திரத்தை எடுக்கலாமா என்ற குழப்பத்திலிருக்கிறாராம். எந்த படம் எடுத்தா என்ன சார், படம் ஹிட்டானால் சந்தோஷம்தானே.
0 comments:
Post a Comment