↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர, ரஜினி ஒரு பெரும்தொகையை தயாரிப்பாளர் சங்கத்திடம் கொடுத்துள்ளதாகவும், தற்போது அந்த தொகை தயாரிப்பாளர் சங்கத்தின் வசம் இருப்பதாகவும், இதுசம்பந்தமாக தயாரிப்பாளர் சங்கமும் லிங்கா' விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து ஒரு அறிக்கை நேற்று வெளியாகியுள்ளது.
நஷ்ட ஈடாக கொடுக்கப்பட்ட பெரிய தொகையை பிரித்து கொள்வதில் விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இடையே ஏற்பட்ட குழப்பத்தால்தான் கடந்த பத்து நாட்களாக அந்த பணத்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
லிங்கா' பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மனிதாபிமானத்துடன் முன்வந்த சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கை கூறுகிறது.
ஆனால் 'லிங்கா' படத்திற்கு பெரிய தொகையை நஷ்ட ஈடாக ரஜினியின் முயற்சியால் கொடுக்கப்பட்ட போதிலும், அந்த படத்தின் 100வது நாளன்று ரஜினியின் வீட்டிற்கு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெறும் என்று ஒருசில விநியோகிஸ்தர்கள் அறிவித்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment