லிங்காவுக்கு எதிராகவோ, ரஜினிக்கு அவதூறு கற்பிக்கும் விதத்திலோ யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்று லிங்கா விவகாரத்தில் இடைக்கால தடை விதித்திருந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய சொல்லி சிங்காரவேலன் தரப்பு மனுத்தாக்கல் செய்திருந்தது. அது தொடர்பான தீர்ப்பு இன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த தீர்ப்பு சாதகமாக வந்தாலும் சரி, பாதகமாக வந்தாலும் சரி. ரஜினி வீட்டின் முன் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தியே தீருவது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் சிங்காரவேலன். இவருடன் லிங்கா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 350 திரையரங்க உரிமையாளர்களும் கலந்து கொள்ளப் போகிறார்களாம்.
இந்த மெகா பிச்சை போராட்டம் வரும் ஞாயிற்று கிழமை காலை 11 மணிக்கு ரஜினி வீட்டின் முன்பிருந்து துவங்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். முதல் பிச்சையை போடப்போவது ஒரு பிரபல அரசியல் தலைவர் என்று அறிவித்துவிட்டார்கள். ஆனால் முன்பு வருவதாக ஒப்புக் கொண்ட பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தற்போது அதற்கான சூழ்நிலை இல்லை என்று கூறிவிட்டாராம். வேறு பல தலைவர்களுக்கு அழைப்பு போயிருக்கிறது. முன்பு லிங்கா போராட்டத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறிவந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இப்போது இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் போல தெரிகிறது. அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், முதல் பிச்சையை துவங்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் மன்சூரலிகான், ‘முதல் பிச்சையை நான் போடுறேன். எனக்கு வாய்ப்பு கொடுங்க’ என்று சிங்காரவேலனை நச்சரித்து வருகிறாராம்.
ஆனால் பிரச்சனை முற்றுவதற்குள் பத்து கோடி பணத்தை சம்பந்தப்பட்டவர்களை அழைத்து செட்டில் செய்துவிடுவது என்று களத்தில் இறங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு.
பிரச்சனையை ஞாயிறு வரை இழுக்காமல் இன்றே பேசி முடித்தால் ஏகப்பட்ட சங்கடங்கள் தவிர்க்கப்படுமே?
0 comments:
Post a Comment