↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பவர்ஸ்டார் என்றாலே பல் வெளியே தெரியும்வரை வாயை திறந்து சிரிக்க தூண்டும்வகையில் தனது காமெடிமூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக முத்திரை பதித்தவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் கதாநாயகனாக நடித்து வெளியான பல படங்களில் சந்தானத்துடன் நடித்து வெளியான “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற படத்தின் மூலம் இவரின் புகழ் உயர்ந்தது.

மேலும் பல படங்களில் காமெடியனாகவும், சிறப்புத்தோற்றத்தில் சிரிக்க வைத்தும் ரசிகர்களை கவர்ந்தவர் பவர்ஸ்டார். தனக்கு என ஒரு பாதையில் சென்று மாபெரும் ரசிகர் பட்டாளத்தை திரட்டியவர் பவர்ஸ்டார். இவர் தான் கலந்துகொள்ளும் படவிழாக்களிலும், பொதுவிழாக்களிலும் “சூப்பர்ஸ்டார்-க்கு” போட்டி இந்த “பவர்ஸ்டார்” என்று கேலிக்கைப் பேச்சுகளை கொண்டு கவர்ந்தவர்.

இவர் சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர் சிம்புவை “தம்பி சிம்பு ‘வாலுன்னு’ உள்ள டைட்டிலை ‘தலன்னு’ மாற்று சீக்கிரமாக ரிலீசாகி படம் பக்காவா ஓடும் என்றும்”, “சூர்யாவை நீ டுவிட்டரில் வந்ததால் நான் உன்னை பின்பற்றமாட்டேன் என்றும் கலாய்த்து வருகிறார் பவர்ஸ்டார். இவரு மத்தவங்கள கலாய்க்கிறாரா இல்லை மத்தவங்க இவர கலாய்க்கிறாங்களன்னு உங்களுக்குத்தான் தெரியும்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top