காதல் தோல்வியில் இருக்கும் போது வேறு காதல் ஜோடிகளை பார்த்தாலே பழைய நினைவுகள் வந்து தொற்றிக் கொள்ளும்.
ஆனால் அவ்வாறு இல்லாமல், காதல் தோல்வியிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
சரியானதை சிந்தியுங்கள்
ஆசையாக காதலித்த நபர் நம்மை விட்டு சென்றுவிட்டாரே என்று கவலைகொள்ளாமல், அவர் நம்மை விட்டு எதற்காக சென்றார் என்று சிந்தியுங்கள்.
தேவையில்லாத பிரச்சனைகள் என்றால், ஈகோ பார்க்காமல் சமாதானம் செய்யவேண்டும் அல்லது மீண்டும் இணைவது என்பது நடக்காத காரியம் என்றால் மறந்துவிட்டு அமைதியாக இருப்பது நல்லது.
அதோடு இல்லாமல் உங்களது பழக்கவழக்கத்தால் காதல் பிரிவு வந்தால் அதனை மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
எழுதுங்கள்
கவலையில் இருக்கும் நீங்கள் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அவைகளை எழுதுவதும் ஒரு வழியாகும். எண்ணங்கள் மூளையில் இருக்கும் வரையில் அது உங்களுக்கு தொந்தரவாகவே இருக்கும்.
அதனால் ஒருதாளில் அனைத்தையும் எழுதி உங்கள் மனபாரத்தை குறையுங்கள்.
பயணம் செய்யுங்கள்
பயணம் என்பது கவலைகளை மறப்பதற்கு ஒரு எளிய வழி, உங்களுக்கு பிடித்த இடத்தை தெரிவு செய்யுங்கள்.
இதுவரை நீங்கள் சென்றிராத புதிய இடத்திற்கு உங்கள் நண்பர்களோடு சென்று வித்தியாசமான அனுபவத்தை பெற்றிடுங்கள்.
நண்பர்களோடு பேசுங்கள்
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதற்கு பதிலாக, வெளியே சென்று நண்பர்களை சந்தியுங்கள். ஏனெனில் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது உங்களின் மனதில் பழைய நினைவுகளை அலைபாய தொடங்கும்.
இதனால் நிலைமை இன்னும் மோசமடைய தான் செய்யும். அதனால் நண்பர்களிடம் பேசுங்கள், நேரத்தை அவர்களுடன் செலவழித்து கவனத்தை திசை திருப்புங்கள்.
புதுமையாக மாறுங்கள்
காதலிக்கும் போது இருக்கும் ஒருவித உற்சாகம் காதல் முறிவிப்பிற்கு பின்னர் இருப்பதில்லை, ஆதலால் மனதுக்கு பிடித்த வேறு யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து அவர்களோடு உரையாடுங்கள்.
ஒருமுறை வாழும் வாழ்க்கையை காதல் தோல்வியால் கழித்துவிடாமல், அந்த இடத்திற்கு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள்.
அந்த மனதோடு ஒத்துப்போனால் இரு மனங்களும் திருமணத்தில் இணையுங்கள்.
0 comments:
Post a Comment