பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரத்குமார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுத்தள்ளுவதற்கு அதிகாரம் உள்ளது என அண்மையில் இரு வேறு இந்திய ஊடகங்களுக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து தெரிவித்திருந்தார்.
இலங்கை பிரதமரின் இந்த ஆணவ பேச்சை கண்டித்து எதிர்வரும் 23ம் திகதி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.
குறுகிய கடற்பரப்பு காணப்படுவதினால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது இயற்கையாக அமைந்தது எனும் போது இலங்கை பிரதமர் மீண்டும் மீண்டும் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பது இந்தியர்களை சீண்டி வேடிக்கை பார்க்கும் செயலாக காணப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் இலங்கை இந்தியாவுடன் சுமூக உறவு வைத்து கொள்வது போல் ஒரு புறம் நடித்து கொண்டு மறுபுறம் பகையுணர்ச்சியுடன் செயற்படுகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பிரதமரின் இந்த கருத்தை மத்திய அரசு கண்டிப்பதோடு, இலங்கையையும் கடுமையாக எச்சரிக்க வேண்டும் என சரத்குமார் கேட்டு கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.