↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அரையிறுதியில் இந்தியா வலுவான சவாலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறினார்.
காலிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய ஆஸி.கேப்டன் மைக்கேல் கிளார்க் "அரையிறுதியில் இந்தியாவுடன் மோத உள்ளோம். அந்த போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும். இந்தியா சிறப்பான ஃபார்மில் உள்ள அணியாகும். கேப்டன் டோணியின் தலைமையில் அந்த அணி சிறப்பாக ஆடி வருகிறது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சவாலான போட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை" என்றார்
உலக கோப்பை அரையிறுதி போட்டிகளில் ஆஸ்திரேலியா இத்தோடு 7வது முறையாக நுழைகிறது. இதுவரை, நுழைந்த 6 அரையிறுதி சுற்றுகளில், எந்த ஒரு அரையிறுதி போட்டியிலும் அந்த அணி தோற்றதில்லை. 2011 உலக கோப்பையில், காலிறுதியில் அகமதாபாத்தில் நடந்த போட்டியில், டோணி தலைமையிலான இந்திய அணியிடம், ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்வது கொஞ்சம் சவால்தான்: ஒப்புக்கொண்ட ஆஸி.கேப்டன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment