
இதுவரை சோலோ ஹீரோவாக நடித்துவந்த கார்த்தி முதன்முறையாக டபுள் ஹீரோ கதையில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,‘ஏற்கனவேகூட டபுள் ஹீரோ கதையில் நடிக்க கேட்டு என்னை இயக்குனர்கள் அணுகி இருக்கின்றனர். ஆனால் அதில் எனக்கு ஆர்வமில்லை. ஆனால் இயக்குனர் வம்சி கூறிய ஸ்கிரிப்ட் என்னை கவர்ந்தது. உணர்வுபூர்வமாக ஈர்த்ததையடுத்து ஓகே சொன்னேன். இப்போதெல்லாம் செல்போனில்தான் எல்லோருமே பிஸியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அருகில் உள்ளவர்களிடம்கூட பேச மறந்துவிடுகிறார்கள். இப்படம் உறவுகளுக்கு இடையேயான முக்கியத்துவத்தை உணர்த்தும். ஒவ்வொருவரும் மற்றொருவர் மீது எப்படி ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை இரண்டு கதாபாத்திரங்களை கொண்டு கதை விளக்குகிறது' என்றார்.
0 comments:
Post a Comment