↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அதிக அளவில் உலகக் கோப்பையை வென்ற ஒரே அணி ஆஸ்திரேலியாதான். முரட்டுத்தனமான வெற்றிகளைக் குவித்த ஒரே அணியும் ஆஸ்திரேலியாதான். 6 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா அதில் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. 2 முறை இரண்டாவது இடத்தை பெற்றது.

சர்வ வல்லமையும் படைத்த அணியாகத் திகழும் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் மீண்டும் ஒரு கோப்பையை வெல்லும் வேகத்துடன் அரை இறுதிக்கு வந்துள்ளது. ஆனால் இந்தியாவின் சவால் அதற்கு சற்று கடுமையாகவே இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

1975ம் ஆண்டு நடந்த முதலாவது உலகக் கோப்பைப் போட்டியின்போது ஆஸ்திரேலியா 2வது இடத்தைப் பிடித்தது. 


1979 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் முதல் சுற்றுடன் அது வெளியேறியது.

1987ம் ஆண்டு அது முதலாவது கோப்பையை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை பறை சாட்டியது. 


ஆனால் 1992ம் ஆண்டு நடந்த போட்டியின்போது 5வது இடத்தைப் பெற்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.

1996ம் ஆண்டு இரண்டாவது இடம் கிடைத்தது. 

1999ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் வல்லமையின் உச்சம் தொடங்கியது. 

1999 முதல் 2003, 2007 என 3 முறை உலகக் கோப்பையை தொடர்ந்து வென்று தனது ஆதிக்கத்தை வெளிக்காட்டியது ஆஸ்திரேலியா.

2011ல் இந்தியாவில் நடந்த போட்டியின்போது காலிறுதியோடு வெளியேறியது ஆஸ்திரேலியா. அந்த ஆண்டு கோப்பையை இந்தியா வென்றது. 

2015ல் அரை இறுதிக்கு வந்து சேர்ந்துள்ளது ஆஸ்திரேலியா.

இந்த முறை சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் கோப்பைக் கனவு சற்று கூடுதலாகவே உள்ளது. 

அது கை கூடுமா அல்லது இந்தியாவிடம் மண்ணைக் கவ்வுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top