↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் அஜீத்தின் 'வீரம்' மற்றும் விஜய்யின் 'ஜில்லா' ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் பிரமாண்டமாக ரிலீஸானபோதும் அவர்களுக்கு போட்டியாக பல தியேட்டர்களில் வெளியான தெலுங்கு படம் 'நெனோக்காடின்' (Nenokkadine) என்பதை பலர் மறந்திருக்க முடியாது.

மகேஷ்பாபு, கிரித்தி சனான், நடித்த இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் கதை மிகவும் கவர்ந்ததால் இந்த படத்தை அமீர்கான் இந்தியில் ரீமேக் செய்யும் எண்ணத்தில் இருந்தார். ஆனால் அதன்பின்னர் அவர் அந்த திட்டத்தை கைவிட்டதால், இந்த படம் இந்தியில் 'ஏக் கா தும்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பலர் போட்டி போட்டு வருவதாக சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தை தமிழில் டப் செய்து வெளியிடும் உரிமையை ஏ.என்.பாலாஜி என்பவர் பெற்றுள்ளார். இவர் இந்த படத்தை தமிழகம் மற்றும் புதுவையில் 150 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்து அதற்காக தியேட்டர் அதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top