↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பிரபல நடிகை விந்தியா நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'சங்கமம்' படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் தமிழ், தெலுங்கு மலையாளம் என பல படங்களில் நடித்துள்ள நடிகை விந்தியா, கணையம் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் நடிகை விந்தியாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
நடிகையாக மட்டுமின்றி அதிமுகவுக்கு தேர்தல் பிரச்சாரமும் செய்து வரும் நடிகை விந்தியா, சங்கமம், திருநெல்வேலி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, சார்லி சாப்ளின், வயசுப்பசங்க, போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment