கடந்த 2010ல் ஆசியக் கிண்ண போட்டியில் பங்கேற்க இந்திய அணி, இலங்கை சென்றது. அப்போது தம்புலாவில் உள்ள ஒரு ஹொட்டலில் தங்கியிருந்த போது, ரெய்னாவுடன் ஒரு பெண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து பத்திரிகையில் செய்தி வெளியாக, இலங்கை கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்டது. இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்தது.
மேலும் அந்தப் பெண் ரெய்னாவின் ஏஜென்ட் என்றும், ரெய்னா உறவினர் ரித்திகா எனவும் கூறப்பட்டன. அதுமட்டுமல்லாது சில வீரர்களுடன் விளம்பர ஒப்பந்தம் சம்பந்தமாக பேச வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் புதிய குழு ஒன்றை நியமித்துள்ளது. இதில் தற்போதைய நிறைவேற்று குழு உறுப்பினர் ஷமி சில்வா, காமினி விக்ரமசிங்க மற்றும் அலுவலக நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ள்னர்.
இது குறித்து ஷமி சில்வா கூறுகையில், இந்த விவகாரத்தில் ஊடகம் தொடர்பான புகார்கள் எழுந்துள்ளன. இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இதனுடன் தொடர்பில்லாத நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சூதாட்ட பிரச்சனை என்பது முக்கியமான விடயமாக உள்ளது. பாதுகாப்பு ஆலோசகராக உள்ள லோரன்ஸ் பெர்னாண்டோ, எந்தவித அறிக்கையும் கொடுக்காத நிலையில் அவரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment